தலீபான்கள் பஞ்ச்ஷிர் மலைப்பகுதியை கைப்பற்றும் நோக்கில் பல்வேறு தாக்குதல்களை முன்னெடுத்து அதில் பல தோல்விகளையும் சந்தித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலீபான்கள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி கண்ணிமைக்கும் நேரத்தில் கடந்த 15 ஆம் தேதி அந்நாட்டை கைப்பற்றியுள்ளனர். அதிலிருந்து ஆப்கானிஸ்தானில் தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. இதனையடுத்து தலீபான்கள் ஆப்கானிஸ்தானில் உள்ள பஞ்ச்ஷிர் மலைப்பகுதியை கைப்பற்றும் நோக்கில் பல்வேறு தாக்குதலை முன்னெடுத்துள்ளனர். ஆனால் அப்பகுதியை சேர்ந்த வடக்கு கூட்டணி தலீபான்களின் தாக்குதலை வெற்றிகரமாக முறியடித்துள்ளது. இதனைத்தொடர்ந்து கசா பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் 32 தலீபான்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் தலீபான்கள் பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனிடையே வடக்கு கூட்டணி தலீபான்களுக்கு ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில் அவர்கள் கூறியதாவது “பஞ்ச்ஷிர் பகுதிக்குள் நீங்கள் நுழைய நாங்கள் அனுமதிப்போம். ஆனால் இங்கிருந்து உயிருடன் யாரையும் வெளியேற விடமாட்டோம்” என மிரட்டல் விடுத்துள்ளது.
இதற்கிடையில் கவாக் பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் 350 தலீபான்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 40 தலீபான்கள் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர். அதாவது அமெரிக்காவின் ஆயுதங்கள் தங்களிடம் சிக்கியுள்ளதனால் போராட்டம் இனி நீடிக்கும் என வடக்கு கூட்டணி அறிவித்துள்ளது. இருப்பினும் அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய பின்னரும் பஞ்ச்ஷிர் மலைப்பகுதியை தலீபான்கள் கைப்பற்றுவதில் எடுக்கும் முயற்சிகளில் இதுவரை தோல்வியே சந்தித்து வருகின்றது. இதன் காரணமாக ஆத்திரமடைந்த தலீபான்கள் பஞ்சகர் பகுதிக்கு செல்லும் மின் விநியோகம் உட்பட அத்தியாவசிய தேவைகள் அனைத்தையும் முடக்கியுள்ளனர். இதுகுறித்து வடக்கு கூட்டணிகள் கூறியதாவது “பஞ்ச்ஷிர் பகுதிக்கு நாங்கள் உணவு கொண்டு செல்லும் பாதைகளை முன்னரே நீங்கள் மூடி இருப்பினும் தங்கள் படைகள் உங்களிடம் ஒருபோதும் சரண் அடையாது” என கூறியுள்ளார்கள்.