பெண் பாதுகாப்பு வீரர் ஒருவர் தனது சீருடையை தீயிட்டுக் கொளுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டை தலீபான்கள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி கண்ணிமைக்கும் நேரத்தில் கைப்பற்றியுள்ளனர். அதனால் ஆட்சி அதிகாரம் முழுவதும் தலீபான்களின் வசம் சென்றுள்ளது. இதுக்குறித்து பெண் பாதுகாப்பு வீரர் ஒருவர் தலீபான்கள் ஆட்சியில் வாழ்வது மிகவும் கொடூரமானது என கதறி அழுதுள்ளார். அந்த பெண் பாதுகாப்பு வீரர் Kubra Behroz ஆவார். மேலும் 35 வயதுடைய அவர் தனது கணவர் மற்றும் இரு குழந்தைகளுடன் காபூல் நகரில் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானின் தேசிய பாதுகாப்பு படையில் இணைந்து அமெரிக்க இராணுவத்தினரால் பயிற்சியும் பெற்றுள்ளார். இந்நிலையில் தலீபான்களின் ஆட்சி அதிகாரத்தில் வாழ்வது மிகவும் கொடூரமானது என்பதால் எனது வாழ்க்கை முடிந்தது எனக் கூறி கதறி அழுத Kubra Behroz தனது ராணுவ சீருடையை தீயிட்டுக் கொளுத்தி எதிர்ப்பை தெரிவித்துள்ளார். மேலும் பெண் போலீஸ் அதிகாரி ஒருவரை தலீபான்கள் சுட்டுக் கொலை செய்ததிற்கும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து தலீபான்கள் பாராளுமன்றம் முழுவதையும் கைப்பற்றிய நிலையில் Kubra Behroz தனது சீருடையை கொளுத்திவிட்டு இணையத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது “நாங்கள் அடுத்து என்ன செய்யவதென்றே தெரியாமல் இருக்கிறோம். மக்கள் நாட்டை விட்டு வெளியேரும் பட்டியலில் நானும் ஒருவர். ஆனால் விமான நிலையத்தில் விமான சேவை இல்லை என்பதனால் மக்கள் கூட்டத்தில் சிக்கியுள்ளேன். இதனையடுத்து தலீபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய பிறகு பல்லாயிரக்கணக்கான மக்கள் அந்நாட்டை விட்டு வெளியேறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினரை பொருத்தவரை அவர்கள் கல்வியறிவும் இல்லாதவர்கள் பல்துலக்கவும் தெரியாதவர்கள் என்பதே உண்மை” என கூறியுள்ளார்.