தலீபான் தீவிரவாதிகள் 12 முதல் 45 வயது வரையிலான பெண்களின் பட்டியலை தயாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தான் முழுவதையும் தலீபான் தீவிரவாதிகள் கண்ணிமைக்கும் நேரத்தில் கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில் தலீபான் தீவிரவாதிகள் 12 முதல் 45 வயது வரையிலான பெண்களின் பட்டியலை தயாரித்து வருகின்றனர். மேலும் அந்த பெண்களை தலீபான் தீவிரவாதிகள் தொடர்ந்து தொடர்பு கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக அந்தப் பெண்களை தலீபான் தீவிரவாதிகளுக்கு கட்டாயத் திருமணம் செய்து வைக்கப்படலாம் என்ற அச்சம் மக்களிடையே எழும்பியுள்ளது. இதுவே தலீபான் தீவிரவாதிகளின் போராட்டத்திற்கான வெகுமதியாக கூட அமையலாம் என்று மக்கள் அச்சத்துடன் தெரிவித்துள்ளனர். மேலும் காபூலில் 25 வயது உடைய ஒரு பெண் ஆசிரியராக பணியாற்றி வருகின்றார்.
அந்த ஆசிரியர் இனி பள்ளிக்கு கணவருடன் தான் செல்ல வேண்டும் எனவும் சட்டத்திற்கு உட்பட்டு தான் ஆடைகள் அணிய வேண்டும் மற்றும் தெருவில் தனியாக செல்லக்கூடாது என்றும் தலீபான் தீவிரவாதிகள் அவரிடம் கூறியுள்ளனர். ஒருவேளை அவ்வாறு செய்யத் தவறினால் அவர்களுக்கு மரண தண்டனை அளிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் அந்தப் பெண் வேலைக்கு திரும்புவது சந்தேகம் தான் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி பள்ளிகளையும் தலீபான்கள் வசப்படுத்தி கொள்வார்கள் என்ற அச்சமும் மக்களிடையே உருவாகியுள்ளது. மேலே குறிப்பிட்ட அந்த பள்ளி ஆசிரியரின் கணவர் சிறிது காலம் அமெரிக்க படைகளுடன் இணைந்து செயல்பட்டவர் என்பதால் தலீபான் தீவிரவாதிகளால் எப்போது வேண்டுமானாலும் அவர் கைது செய்யபடலாம் என்றும் மக்கள் அஞ்சுகின்றனர்.