இளவரசர் வில்லியம் காபூலில் சிக்கியிருக்கும் ராணுவ வீரர் ஒருவரையும் அவரது குடும்பத்தினரையும் மீட்டு பிரித்தானியாவிற்கு அழைத்துச் சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிரித்தானிய மகாராணியாரின் ராஜ குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர்களில் ஒருவர் வில்லியம் ஆவார். இவர் andhurst என்னுமிடத்தில் ராணுவ பயிற்சி பெற்றுள்ளார். அப்போது ஆப்கானிஸ்தான் ராணுவ வீரர் ஒருவரை இளவரசர் சந்தித்துள்ளார். இதனையடுத்து ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலீபான்கள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி அந்நாட்டை கண்ணிமைக்கும் நேரத்தில் கடந்த 15 ஆம் தேதி கைப்பற்றியுள்ளனர். அதிலிருந்து ஆப்கானிஸ்தானில் தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. மேலும் ஆப்கானிஸ்தானின் ஆட்சி அதிகாரம் முழுவதும் தலீபான்களின் கைவசம் சென்றுள்ளது.
அதனால் உயிருக்கு பயந்த ஆப்கானிஸ்தான் மக்கள் தங்கள் சொந்த நாட்டில் இருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற மக்கள் அனைவரும் காபூல் விமான நிலையத்தை நோக்கி படையெடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அமெரிக்கா, பிரித்தானியா உட்பட பல வெளிநாட்டுப் படைகள் தங்கள் சொந்த நாட்டு மக்களை ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற்றியும் வந்துள்ளனர். இந்நிலையில் அமெரிக்கா மற்றும் பிரித்தானிய படைகளுக்கு உதவிய ஆப்கானிஸ்தான் நாட்டவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இளவரசர் வில்லியம் Sandhurst ராணுவ பயிற்சியில் சந்தித்த ராணுவ வீரரும் அவரது குடும்பமும் காபூலில் சிக்கியிருப்பது இளவரசருக்கு தெரியவந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து இளவரசர் வில்லியம் உடனடியாக அவர்களை காபூலில் இருந்து மீட்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். அதன்பின் ராஜ குடும்பத்தினருக்கு உதவும் ராணுவ வீரர்களில் ஒருவரான Rob Dixon ஆப்கானிஸ்தானில் உள்ளார். அதன்பின் இளவரசர் வில்லியம் Rob Dixon உதவியுடன் Sandhurst அறிமுகமான ராணுவ வீரரையும் அவரது குடும்பத்தையும் ஆப்கானிஸ்தானிலிருந்து மீட்டு பிரித்தானியாவிற்கு அழைத்து சென்றுள்ளார். இந்த சம்பவம் குறித்து முன்னாள் அதிகாரியாகிய Major Andrew Fox கூறியதாவது “எங்களுக்கு ராணுவ பயிற்சியில் கற்றுக் கொடுக்கப்பட்ட உண்மை மற்றும் மற்றவர்கள் மீது மரியாதை போன்ற கொள்கைகளை கடைப்பிடித்து இளவரசர் வில்லியம் அதனடிப்படையில் செயல்பட்டு Sandhurst சந்தித்த ராணுவ வீரரையும் அவரது குடும்பத்தையும் காபூலிலிருந்து மீட்டுள்ளார்” என கூறியுள்ளார்.