நான்கு பெண்கள் இஸ்லாமிய உடையில் கைகளில் சுவரொட்டிகளை வைத்துக்கொண்டு தலிப்பான் தீவிரவாதிகளிடம் உரிமைகளை கேட்டு வீதியில் நின்று போராட்டம் நடத்தியுள்ளனர்.
தலிபான் தீவிரவாதிகள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி ஆப்கானிஸ்தான் நாட்டை கண்ணிமைக்கும் நேரத்தில் கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில் அங்கு தலிப்பான்களின் ஆதிக்கத்தை பொறுக்க முடியாத காபூல் நகரை சேர்ந்த நான்கு பெண்கள் இஸ்லாமிய உடையில் கைகளில் வாசகங்கள் எழுதி வைக்கப்பட்ட சுவரொட்டிகளை வைத்துக்கொண்டு வீதியில் நின்று போராட்டம் நடத்தியுள்ளனர். அந்த சுவரொட்டியை தலிப்பான்களின் முகத்திற்கு நேராக நீட்டி ‘எங்கள் உரிமைகளை திருப்பிக் கொடுங்கள்’ என்று பெண்கள் முழக்கமிட்டுக் கொண்டே இருந்தனர். ஆனால் தலிப்பான் தீவிரவாதிகள் அவர்களின் போராட்டத்தை தடுத்து நிறுத்தவில்லை.
இந்த போராட்டம் குறித்து அந்த பெண்கள் கூறியதாவது ” எங்களை எந்த சக்தியாலும் புறக்கணிக்க இயலாது. நாங்கள் பல ஆண்டு காலமாக சேர்த்து வைத்த சாதனைகள் வீணடிக்கப்படக் கூடாது. இது எங்கள் உரிமை” என போராடியுள்ளனர். இதுகுறித்து தலிப்பான் தீவிரவாதிகளின் செய்தி தொடர்பாளர் கூறுயதாவது “பெண்கள் அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை. மேலும் எங்கள் இஸ்லாமிய விதிப்படி பெண்களுக்கு எல்லா உரிமைகளும் வழங்குவதற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். சமூகத்தில் எல்லா மக்களையும் எவ்வித பாகுபாடும் இல்லாமல் சரிசமமாக நடத்துவதே எங்கள் கொள்கை” என உறுதியளித்துள்ளார். இருப்பினும் ஆப்கானிஸ்தான் நாட்டில் முக்கிய பதவிகளில் உள்ள பெண்களின் வீடுகளை தலிபான் தீவிரவாதிகள் அடையாளப்படுத்திவிட்டு சென்றது அவர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.