தலீபான் தீவிரவாதிகளின் அதிகாரத்திற்கு அண்டை நாடு பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலீபான் தீவிரவாதிகள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி கடந்த 15 ஆம் தேதி அந்நாட்டை முற்றிலுமாக கைப்பற்றியுள்ளது. மேலும் ஆப்கானிஸ்தானின் அதிபர் அஷ்ரப் கனி தனது குடும்பத்துடன் நாட்டை விட்டு தப்பி சென்றுள்ளார். இதனைத்தொடர்ந்து தலீபான் தீவிரவாதிகள் இன்னும் சில நாட்களில் புதிய அரசை உருவாக்குவது தொடர்பாக அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிடுவதாக கூறியிருந்தது. மேலும் தலீபான் தீவிரவாதிகளின் ஆட்சிக்கு சீனா ஆதரித்துள்ளது.
இருப்பினும் பல நாடுகள் தலீபான் தீவிரவாதிகளின் ஆட்சியை எதிர்க்கின்றனர். இந்நிலையில் தலீபான் தீவிரவாதிகளுக்கு அண்டை நாடான ஈரான் பகிரங்க எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இதனையடுத்து அல்போர்ஸ் மாகாணத்திலுள்ள ஈரான் உச்ச தலைவரின் பிரதிநிதி Ayatollah Mehdi Hamedani எச்சரிக்கை விடுத்து கூறியதாவது ” கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த தலீபான் தீவிரவாதிகளுக்கும் தற்போது இருக்கிறவர்களுக்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை. ஈரானுக்கு எதிராக செயல்பட நினைத்தால் ஐ.எஸ்-க்கு ஏற்பட்ட அதே நிலைமை தான் உங்களுக்கும் ஏற்படும்” என எச்சரித்துள்ளார்.