Categories
உலக செய்திகள்

எதிரிகளை வீடு வீடாக தேடும் தலீபான் தீவிரவாதிகள்…. பீதியில் மக்கள்…. அறிக்கை வெளியிட்ட ஐ.நா….!!

தலீபான் தீவிரவாதிகள் அமெரிக்க மற்றும் நோட்டா படைகளுடன் இணைந்து அவர்களுக்கு எதிராக செயல்பட்ட நபர்களையும் அவர்களது குடும்பத்தையும் வீடு வீடாக தேடி வருவதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டை விட்டு அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலீபான் தீவிரவாதிகள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி கடந்த 15 ஆம் தேதி அந்நாட்டை கைப்பற்றியுள்ளனர். அங்கு தலீபான் தீவிரவாதிகளின் ஆதிக்கம் தலைவிரித்தாடுகிறது. இந்நிலையில் ஐ.நா வன்முறை மதிப்பீட்டு ஆலோசகர்களின் ரகசிய ஆவணம் படி தலீபான்களுக்கு எதிராக அமெரிக்க மற்றும் நேட்டோ படைகளுடன் இணைந்து செயல்பட்ட நபர்களையும் அவர்களது குடும்பத்தையும் தீவிரவாதிகள் குறிவைத்து வீடு வீடாக தேடி வருவதை உறுதிபடுத்தியுள்ளது.

மேலும் காபூல் விமான நிலையத்திற்குள் செல்லும் மக்களையும் தலீபான் தீவிரவாதிகள் மறித்து சோதனை செய்து வருகின்றனர். இதனைதொடர்ந்து தலீபான் தீவிரவாதிகளின் சோதனைக்கு மறுப்பு தெரிவிக்கும் நபர்களையும் அவர்களது குடும்பத்தையும் ஷரியத் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தண்டனை கொடுத்து வருகின்றனர். இதுக்குறித்து ஐ.நா-வில் அறிக்கை சமர்பித்த உலகளாவிய பகுப்பாய்வுகளுக்கான நோர்வே மையம் கூறியதாவது “அமெரிக்க மற்றும் நேட்டோ படைகளுடன் இணைந்து தலீப்பான் தீவிரவாதிகளுக்கு எதிராக செயல்பட்ட நபர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் பயங்கரவாதிகளால் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்படுவார்கள்” என தகவல் தெரிவித்துள்ளது.

Categories

Tech |