Categories
உலக செய்திகள்

எதிரிகளை வீடு வீடாக தேடும் தலீபான்கள்…. ஒருவர் படுகொலை…. பீதியில் மக்கள்….!!

தலீபான் தீவிரவாதிகள் அமெரிக்க மற்றும் நேட்டோ படைகளுடன் இணைந்து அவர்களுக்கு எதிராக பணியாற்றியவர்களை வீடு வீடாக சென்று தேடி வருவதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலீபான் தீவிரவாதிகள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி கடந்த 15 ஆம் தேதி அந்நாட்டை கைப்பற்றியுள்ளனர். அதனால் அங்கு தலீபான் தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. மேலும் ஆப்கானிஸ்தான் நாட்டின் முக்கிய நகரமான காபூலையும் கைப்பற்றி தன்வசப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் தலீபான் தீவிரவாதிகள் அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகளுடன் இணைந்து அவர்களுக்கு எதிராக பணியாற்றியவர்களை வீடு வீடாக தேடி வருகின்றனர். இதனால் மக்கள் பீதியடைந்து ஆப்கானிஸ்தானை விட்டு தப்பி செல்ல வேண்டும் என்ற முடிவை எடுத்துள்ளனர். இதனைத்தொடர்ந்து தலீபான் தீவிரவாதிகள் ஜேர்மன் செய்தி தொடர்பாளர்க்கு சொந்தமான மூன்று வீடுகளில் சோதனை நடத்தியுள்ளனர். அந்த சோதனையில்  செய்தி தொடர்பாளரின் குடும்ப உறவினர் ஒருவர் தலீபான் தீவிரவாதிகளால் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

மேலும் மற்றொரு செய்தி தொடர்பாளரின் உறவினர் தலீபான் தீவிரவாதிகளால் கடுமையாக தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் ஜேர்மனி வந்தடைந்துள்ளதாக ஊடகம் ஒன்று தகவல் தெரிவித்துள்ளது. இதனையடுத்து தலீபான் தீவிரவாதிகள்கள் வீடு வீடாக சென்று எதிரிகளை தேடி வருவதாகவும், மேலும் காபூல் விமான நிலையம் வழியாக நாட்டை விட்டு வெளியேற முயற்சி செய்யும் மக்களையும் அவர்கள் சோதனை செய்வதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆகவே தலீபான் தீவிரவாதிகள் பொதுமன்னிப்பு வழங்கப்படும் மற்றும் பெண்களின் உரிமைகள் மதிக்கப்படும் என அவர்கள் கொடுத்த அத்தனை வாக்குறுதிகளும் காற்றோடு போய் விடுவது உறுதி என்பதை ஏற்பதற்கு மறுப்பதற்கில்லை. ஆகவே தலீபான்களின் இந்த சோதனைகள் மக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |