ஆப்கானிஸ்தானில் இருந்து கனடா படைகள் வெளியேறாது என அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் முழுவதையும் தலீபான்கள் கடந்த 15 ஆம் தேதி கைப்பற்றியுள்ளனர். அதிலிருந்து அங்கு தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. அதனால் உயிருக்கு பயந்த மக்கள் ஆப்கானிஸ்தான் நாட்டை விட்டு தொடர்ந்து வெளியேறி வருகின்றனர். இந்த நிலையில் ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றி இதற்கு முக்கிய காரணம் அமெரிக்காதான் என்று பல நாடுகளிலிருந்து குற்றசாட்டுகள் எழும்பியுள்ளது. ஆனால் அமெரிக்கா அந்த குற்றசாட்டுகளை சிறிதும் கூட கண்டுகொள்ளவில்லை.
அதோடுமட்டுமில்லாமல் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நடப்பு மாதம் இறுதிக்குள் ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகளை வெளியேற்ற போவதாக உறுதியளித்துள்ளார். ஆனால் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறினாலும் நடப்பு மாதம் முடிவிற்கு பிறகும் கனடா படைகள் அங்கிருந்து வெளியேறாது என கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ திட்டவட்டமாக கூறியுள்ளார். மேலும் தலீபான்கள் ஆப்கானிஸ்தான் மக்கள் அங்கிருந்து வெளியேற அனுமதிக்க வேண்டும் என அழுத்தம் கொடுக்கப்போவதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து ஆப்கானிஸ்தான் மக்களை இயன்ற அளவு அங்கிருந்து மீட்க G7 நாடுகளுடன் இணைந்து செயல்பட போவதாக கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உறுதியளித்துள்ளார்.