காபூல் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட மீட்பு விமானம் ஒன்றில் ஒரு தாய் தனது மகள் மற்றும் மூன்று மகன்களுடன் பிரான்ஸ் நாட்டிற்கு தப்பி சென்றுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலீபான்கள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி அந்நாட்டை கண்ணிமைக்கும் நேரத்தில் கடந்த 15 ஆம் தேதி கைப்பற்றியுள்ளனர். மேலும் ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரமான காபூலையும் தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இதனால் ஆப்கானிஸ்தான் முழுவதும் தலீபான்களின் கைவசம் சென்றுள்ளது. அதிலிருந்து ஆப்கானிஸ்தானில் தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. இதனால் உயிருக்கு பயந்த ஆப்கானிஸ்தான் மக்கள் தங்கள் சொந்த நாட்டில் இருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதன் காரணமாக நாட்டை விட்டு வெளியேறுவதற்காக மக்கள் அனைவரும் காபூல் விமான நிலையத்தில் குவிந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாட்டு படைகளும் தங்கள் சொந்த நாட்டு மக்களை மீட்பு விமானங்கள் மூலம் வெளியேற்றி வந்துள்ளனர்.
இதனையடுத்து வரும் 31-ஆம் தேதிக்குள் வெளி நாட்டு மக்கள் அனைவரும் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற வேண்டும் என தலீபான்கள் உத்தரவிட்டுள்ளனர். அதன் பின்னரே ஆப்கானிஸ்தானில் புதிய ஆட்சி அமைப்பது குறித்து அறிவிக்கப்படும் என தலீபான்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் தங்கள் சொந்த நாட்டு மக்களை ஆப்கானிஸ்தானில் இருந்து இராணுவ சரக்கு விமானங்களில் வெளியேற்றி வந்துள்ளனர். மேலும் ஆப்கானிஸ்தர்கள் நூற்றுக்கணக்கானோரையும் மீட்டு வந்துள்ளனர். அதன்பின் 56 வயதுடைய கதிரா என்ற பெண் தனது மூன்று பிள்ளைகளுடன் ஆப்கானிஸ்தானில் வசித்து வந்துள்ளார். தற்போது தலீபான்களின் ஆட்சிக்கு பயந்து நாட்டைவிட்டு வெளியேறும் மக்களில் இவரது குடும்பமும் ஓன்று. இதனையடுத்து கதிரா தனது மகள் மற்றும் மூன்று மகன்களுடன் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற காபூல் விமான நிலையத்திற்கு சென்றுள்ளார்.
இந்த நிலையில் காபூல் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட மீட்பு விமானம் ஒன்றின் மூலம் கதிரா தனது மகள் மற்றும் மகனுடன் பிரான்ஸ் நாட்டிற்கு தப்பி சென்றுள்ளார். அதாவது கதிராவின் மூத்த மகள் ஷகிபா தாவோத் என்பவர் ஆவார். அவர் கடந்த 12 வருட காலமாக பிரான்சில் வசித்து வந்துள்ளார். இதனைத்தொடர்ந்து பாரிஸ் விமான நிலையத்தில் 12 வருடம் கழித்து தனது தாயைப் பார்த்த ஷகிபா தாவோத் அம்மாவை கட்டி அணைத்து அழுது தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தியுள்ளார். பின்பு ஷகிபா தாவோத் வெகு காலம் கழித்து தனது தாய், சகோதரர்கள் மற்றும் சகோதரிககளை கண்டு சந்தோஷம் அடைந்துள்ளார். இதுகுறித்து கதிராவின் மகள் ஷகிபா தாவோத் கூறியதாவது “இப்போது நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். என் அம்மாவை பார்த்த இந்த நொடியில் எனது பயங்கள் அனைத்தும் ஓடிவிட்டது” என கூறியுள்ளார். மேலும் கதிராவுடன் வந்த மகன் மஹ்தி கூறியதாவது “நாங்கள் இங்கு வந்து சேர்ந்தது கனவா இல்லை நிஜமா என்று எனக்கே தெரியவில்லை” என கூறியுள்ளார்.