Categories
உலக செய்திகள்

கடைசி மீட்பு விமானம்…. காபூலில் இருந்து புறப்பட்டது…. பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட தகவல்….!!

ஆப்கானிஸ்தானிலிருந்து மக்களை மீட்கும் பிரித்தானியாவின் கடைசி மீட்பு விமானம் காபூல் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுள்ளது என பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலீபான்கள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி அந்நாட்டை கண்ணிமைக்கும் நேரத்தில் கடந்த 15 ஆம் தேதி கைப்பற்றியுள்ளனர். மேலும் ஆப்கானிஸ்தானில் முக்கிய நகரமான காபூலையும் தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். அதனால் ஆப்கானிஸ்தான் முழுவதும் தலீபான்களின் கைவசம் சென்றுள்ளது. அதிலிருந்து ஆப்கானிஸ்தானில் தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. இதனால் உயிருக்கு பயந்த ஆப்கானிஸ்தான் மக்கள் தங்கள் சொந்த நாட்டில் இருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஆப்கானிஸ்தான் நாட்டை விட்டு வெளியேறுவதற்காக மக்கள் அனைவரும் காபூல் விமான நிலையத்தில் குவிந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து ஒவ்வொரு நாட்டு படைகளும் தங்கள் சொந்த நாட்டு மக்களை மீட்டு விமானங்கள் மூலம் வெளியேற்றி வந்துள்ளனர்.

இதனையடுத்து வரும் 31 ஆம் தேதிக்குள் வெளிநாட்டு மக்கள் அனைவரும் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற வேண்டும் என தலீபான்கள் உத்தரவிட்டுள்ளனர். அதன் பின்னரே ஆப்கானிஸ்தானில் புதிய ஆட்சி அமைப்பது குறித்து அறிவிக்கப்படும் என தலீபான்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அமெரிக்கா, பிரித்தானியா, கனடா மற்றும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் தங்கள் சொந்த நாட்டு மக்களை ஆஃப்கானிஸ்தானில் இருந்து மீட்பு விமானங்கள் மூலம் வெளியேற்றி வந்துள்ளனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தானிலிருந்து மக்களை மீட்கும் பிரித்தானியாவின் கடைசி மீட்பு விமானம் காபூல் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுள்ளது. மேலும் குடியுரிமை பெற தகுதி பெற்ற அப்பாவி மக்களை காபூல் விமான நிலையத்தில் தவிக்கவிட்டு பிரித்தானியா மீட்பு பணியை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.

இதுகுறித்து பிரித்தானியாவின் பாதுகாப்பு அமைச்சகம் கூறியதாவது “பிரித்தானியாவின் கடைசி மீட்பு விமானம் காபூல் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுள்ளது. அதில் ஆப்கானிஸ்தர்கள் மட்டுமே இருப்பார்கள். மேலும் இதுதான் ஆப்கானிஸ்தானில் இருந்து புறப்படும் மக்களுக்கான கடைசி மீட்பு விமானம் ஆகும். இனிமேல் தூதரக பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் தேசிய பாதுகாப்பு படையினருக்கு மட்டுமே விமானம் அனுப்பப்படும்” என அறிவித்துள்ளது. இதனால் ஆப்கானிஸ்தான் மக்கள் தங்களது கடைசி வாய்ப்பையும் இழந்து காபூலில் தவிக்கின்றனர். மேலும் வரும் 31 ஆம் தேதிக்குள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளிநாட்டு படைகள் வெளியேற வேண்டும் என தலீபான்கள் கொடுத்த கால அவகாசம் முடிவுக்கு வரும் நிலையில் அனைத்து நாட்டு படைகளும் மீட்பு பணியை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது. அதாவது தலீபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ள நிலையில் பிரித்தானியா உட்பட பல நாடுகள் இரண்டு வாரங்களுக்கு முன்பாகவே மீட்புப் பணியை தொடங்கியுள்ளனர். இதனால் சுமார் 15000 பிரித்தானியர்கள் மற்றும் ஆப்கானிஸ்தர்கள் மீட்பு விமானம் மூலம் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

Categories

Tech |