ஆப்ப மாவு
தேவையான பொருட்கள் :
பச்சரிசி – 1 1/2 கப்
வெந்தயம் – 1 டீஸ்பூன்
உளுந்து – 2 டீஸ்பூன்
துருவிய தேங்காய் – 1/2 கப்
சாதம் – 1/2 கப்
சர்க்கரை – 2 டீஸ்பூன்
ஆப்பசோடா – 1/4 ஸ்பூன் [விரும்பினால்]
உப்பு – தேவையான அளவு
தயிர் – 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை :
முதலில் பச்சரிசி , வெந்தயம் , உளுந்து ஆகியவற்றை 4 மணி நேரம் ஊறவிட வேண்டும் . இதனுடன் துருவிய தேங்காய் , சாதம் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். பின் இதனுடன் சர்க்கரை , தயிர் சேர்த்து 12 மணி நேரம் புளிக்க விடவேண்டும் . மறுநாள் ஆப்பசோடா மற்றும் தேவையான உப்பு சேர்த்து கலந்தால் சூப்பரான ஆப்ப மாவு தயார் !!!