Categories
சினிமா தமிழ் சினிமா

ஆரி கேட்டது தப்பு… கேமராவில் புலம்பும் பாலாஜி… வெளியான மூன்றாம் புரோமோ…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் நடைபெறுகிறது. இந்த போட்டியில் முதல் இடத்தை பிடித்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற வேண்டும் என அனைத்து போட்டியாளர்களும் தீவிர முயற்சியில் ஈடுபடுகின்றனர். இன்றைய 2-வது புரோமோ வில் ஆரி ,பாலா இருவரும் பயங்கர வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது ‘நீ ஆம்பள பையன் தானே’ என ஆரி கேட்க பாலாஜிக்கு கோபம் ஏறுகிறது. தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது புரோமோ வில் கேமரா முன் நடந்த சம்பவம் குறித்து புலம்புகிறார் பாலாஜி .

அதில் ‘நான் என் தவறை ஒப்புக் கொள்கிறேன். இந்த வீட்டில் நான் எது பண்ணினாலும் தவறு எனக் கூறினால் என்ன அர்த்தம் . நீ ஆம்பள பையன் தானே? என ஆரி கேட்டது தப்பு . யாருக்கு தான் கோபம் வராது நீ ஆம்பள பையனா ?எனக் கேட்டால் . சரி ஓகே நான் கோபப்படல, இனி கோபப்பட மாட்டேன் ‘ என தன்னந்தனியாக புலம்பித் தள்ளுகிறார் பாலாஜி.

Categories

Tech |