ஆரிக்கு ஓட்டு போடுமாறு பிக்பாஸ் பாலாவின் நெருங்கிய தோழி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் .
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது . இந்த சீசனின் டைட்டில் வின்னர் யார் ? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. பலரும் தங்களது ஆதரவை ஆரிக்கு அளித்து வரும் நிலையில் அவர் தான் டைட்டில் வின்னர் ஆவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பிக்பாஸ் வோட்டிங் விவரங்கள் படி ஆரி முதலிடத்தில் இருப்பதாக தெரிகிறது.
இந்நிலையில் பிக்பாஸில் கலந்துகொண்ட போட்டியாளரான சுசித்ரா ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் . அதில் ‘ஆரி ஜெயிக்கவில்லை என்றால் அது அவருக்கு இழைக்கப்படும் மிகப்பெரிய அநீதி. நீங்கள் அவருடைய ரசிகரா இல்லையா என்று தெரியவில்லை. ஆனால் தயவு செய்து அவருக்கு ஓட்டு போடுங்கள். நிஜ வாழ்க்கையில் ஹீரோ அவர் ‘ என்று கூறியுள்ளார். பிக்பாஸ் வீட்டில் சுசித்ராவும் பாலாவும் நெருங்கிய நண்பர்களாக வலம் வந்த நிலையில் அவரின் இந்த பதிவு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது .