கனமழை பெய்ததால் ஆற்றின் கரை உடைந்து நகரம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
தெற்கு ஸ்பெயினில் வீசிய பாரா புயலினால் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கனமழை பெய்ததால் அங்குள்ள நாவரே மாகாணத்தில் பாயும் அர்கா ஆற்றின் கரை உடைந்தது. இதனால் வில்லவா நகரம் முழுவதும் வெள்ளத்தினால் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வீட்டின் கூரைகள் மட்டுமே புலப்படும் அளவிற்கு தண்ணீர் குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது.
இந்த பேரிடரின் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட மக்கள் பாதுகாப்பாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக அங்கு மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.