Categories
சினிமா தமிழ் சினிமா

ஆரியிடம் அட்வைஸ் கேட்பாராம் பாலா… குறும்படம் போட்டு கட்டிய கமல்… வெளியான மூன்றாம் புரோமோ…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று வார இறுதி நாள் என்பதால் நடிகர் கமல்ஹாசன் போட்டியாளர்களை அகம் டிவி வழியே சந்தித்து பேசுவார் . இன்று வெளியான முதல் புரோமோவில் ‘இன்னும் ஒரு வாரமே உள்ளது, இவர்களில் ஒருவர் வெளியேற போகிறார்’ என கமல் அதிரடியாக பேசியிருந்தார் . இதையடுத்து  வெளியாகிய இரண்டாவது புரோமோ வில் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க்கில் சோம் சேகர் வெற்றி பெற்றுள்ளார் . அவருக்கு போட்டியாளர்களில் அனைவரும் சேர்ந்து கோல்டன் டிக்கெட்டை வழங்குகின்றனர்.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது புரோமோ வில் ‘பிக்பாஸில் இருந்து வெளியேறிய பின் சப்போஸ் ஏதாவது பிரச்சினை என்றாலும் ஆரியிடம் அட்வைஸ்  கேட்பேன்’ என பாலா கூறியதை நல்ல வித குறும்படமாக கமல் போட்டுக் காட்டியுள்ளார். இதுவரை விக்ரம் வேதா பின்னணியில் எதிரிகளாக காட்டப்பட்ட பாலா, ஆரி இருவரும் இனி நல்ல நண்பர்கள் ஆவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |