Categories
சினிமா தமிழ் சினிமா

ஆரியின் ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’… அசத்தலான டீஸர் ரிலீஸ்…!!!

நடிகர் ஆரியின் நடிப்பில் உருவாகியுள்ள ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ படத்தின் அசத்தலான டீஸர் வெளியாகியுள்ளது .

தமிழ் திரையுலகில் நடிகர் ஆரி அர்ஜுனன் கடந்த 2010ஆம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் வெளியான ‘ரெட்டைசுழி’ படத்தின் மூலம் அறிமுகமானார் . இதையடுத்து இவர் நடிப்பில் வெளியான ‘மாலைப் பொழுதின் மயக்கத்திலே’ படம் சரியான வரவேற்பை பெறவில்லை. இதன் பின்னர் ‘நெடுஞ்சாலை’ படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் ஆரி. இதைத்தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்த ஆரி சமூக அக்கறை கொண்ட விஷயங்களை செய்து  தனக்கென தனி ரசிகர்களை உருவாக்கினார் .

பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் கலந்துகொண்டு மக்களின் பேராதரவுடன் டைட்டிலை வென்றார் . இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன் ஆரி அலேகா ,பகவான், எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான் உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார் . இந்நிலையில் தற்போது ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ படத்தின் அசத்தலான டீஸர் வெளியாகியுள்ளது . இயக்குனர் கவிராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் சாஷ்வி பாலா, மொட்டை ராஜேந்திரன் ,பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் .

Categories

Tech |