பிக்பாஸ் சனம் ஷெட்டி ஆரியுடன் இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது . இன்று மாலை 6 மணிக்கு பினாலே நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. ஆட்டம், பாட்டம் என கொண்டாட்டமாக நடைபெறும் இந்த நிகழ்ச்சியைக் காண பிக்பாஸ் ரசிகர்கள் மிகுந்த ஆவலில் உள்ளனர் . மிக பிரமாண்டமாக நடைபெறும் கிராண்ட் பினாலே நிகழ்ச்சியில் பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர்.
https://twitter.com/SanamShettyoff/status/1350656209079001091
இந்நிலையில் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான சனம் ஷெட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் ஆரியுடன் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அது சிறப்பு விருந்தினராக பிக்பாஸ் வீட்டிற்குள் சனம் சென்றிருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் . அவர் பிக்பாஸ் வீட்டிற்கு சென்றிருந்த போது ஆரியிடம் நீங்கள்தான் டைட்டில் வெல்ல வேண்டும் என தெரிவித்திருந்தார். தற்போது இந்த புகைப்படத்தை சனம் ஷெட்டி வெளியிட்டது ஆரிதான் டைட்டில் வின்னர் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது .