ஆற்றில் மூழ்கி பலியான பிள்ளைகளின் குடும்பத்தாருக்கு அமைச்சர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ராஜண்ணா ஸ்ரீசில்லா மாவட்டத்தை ஓட்டி மன்யார் என்ற ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றில் கனமழை காரணமாக வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மேலும் தடுப்பணையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஆறாக வழிகிறது. இந்த நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த 8 பேர் குளிப்பதற்காக ஆற்றிற்கு சென்றுள்ளனர். அதிலும் 6 பேர் குளித்துக் கொண்டிருக்க இருவர் கரையில் அமர்ந்துள்ளனர்.
இதனை அடுத்து ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த ஆறு பேரும் நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி தத்தளித்துள்ளனர். குறிப்பாக கரையில் அமர்ந்திருந்த இருவரும் சென்று பெற்றோர்களிடம் தகவல் தெரிவித்துள்ளனர். இது குறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து ஆற்றில் இருந்து ஐந்து பேரின் சடலத்தை மீட்டுள்ளனர். மேலும் ஒரு மாணவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
அதிலும் ஆற்றில் மூழ்கிய கோலிபாக கணேஷ், தீகல அஜய், கொங்கா ராகேஷ், ஜடலா வெங்கட சாய், கொங்கா ராகேஷ், ஸ்ரீராம் கிராந்தி குமார் ஆகியோருக்கு 14 முதல் 16 வயதுக்குள் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து அறிந்த தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சரான கே.டி. ராமராவ் சிர்சில்லா பிள்ளைகளை இழந்து தவிக்கும் பெற்றோர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். குறிப்பாக மீட்பு பணிகளுக்காக ஐதராபாத்தில் இருந்து பேரிடர் மீட்புக் குழுவை அனுப்பும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.