ஆறுகளில் நடைபெறும் தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் பல லட்சம் மதிப்பில் செலவு செய்து ஓடம்போக்கி ஆறு, காட்டாறு போன்றவற்றை தூர்வாரும் பணிகளானது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அப்போது ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அரசு முதன்மை செயலாளரும், கணிப்பாய்வு அதிகாரியுமான கோபால் கூறும்போது 16 கோடியே 34 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 174 பணிகள் நடைபெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து திருத்துறைபூண்டி வட்டத்திற்கு உட்பட்ட சாழுவனாறு வாய்க்கால், முல்லையாறு, வேலூர் வாய்க்கால், கொத்தமங்கலம் வாய்க்கால், புதூர் வடிக்கால், பாலம் பாண்டி வாய்க்கால், விழுவப்படிக்கை வடிகால் ஆகிய இடங்களில் நடைபெறும் தூர்வாரும் பணியை கணிப்பாய்வு அதிகாரி கோபால் நேரில் ஆய்வு செய்துள்ளார். மேலும் நடைபெறும் பணிகளை விரைந்து முடிக்குமாறு அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.