மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் பூர்வீக இல்லத்தில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் கோத்மலை வேவண்டனில் இருக்கின்ற பூர்வீக இல்லத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தால் மேற்கூரை முழுவதுமாக எரிந்து சேதம் அடைந்துள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அப்பகுதியில் மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் புதல்வன் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் உட்பட இலங்கை தொழிலாளர்கள், காங்கிரஸின் முக்கிய உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள் அனைவரும் சம்பவ இடத்தில் குவிந்துள்ளனர்.
தீ விபத்து எதனால் ஏற்பட்டது என்று தற்போது வரை தெரியவில்லை. அதனால் கொத்மலை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தீ விபத்து காரணமாக, இல்லத்தில் பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், பல்வேறு உடமைகள் சேதமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.