Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

ஆசிரியர் கூட்டணி சார்பில்…. நடைபெற்ற இரண்டாம் கட்ட போராட்டம்…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் கூட்டணி சார்பில் போராட்டம் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள முதன்மை கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட கிளையின் சார்பில் முதல் கட்ட போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ஆசிரியர்கள் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கலந்து கொண்டனர். இதன் இரண்டாம் கட்ட போராட்டமானது அரக்கோணம் மாவட்ட கல்வி அலுவலகம் முன்பு நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் அமர்நாத் தலைமை தாங்கினார்.

இதனையடுத்து இந்தப் போராட்டத்தில் மாவட்ட தலைவர் மணி, மாவட்ட பொருளாளர் சுரேஷ்குமார் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். இதனைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் உதவி கலெக்டர் தலைமையில் விசாரணை குழு அமைத்து தீர்வு காண ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் மற்றும் தமிழக அரசை வலியுறுத்தி பேசினர். மேலும் வருகிற 31-ஆம் தேதி மூன்றாம் கட்டமாக ராணிப்பேட்டை உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |