கர்நாடகாவில் ஆசிரியர் ஒருவரை தரக்குறைவாக நடத்தியதால் 10_ஆம் வகுப்பு மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சின்னகிரி தாலுகா நல்லூர் ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் பிரகாஷ் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் ஓய்வு பெறும் வயதை நெருங்கிய நிலையில், அந்த ஆசிரியரை கிண்டலும், கேலியும் செய்த சில மாணவர்கள் அவரது ஆடையைப் பிடித்து இழுத்து அவமானப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இந்த காட்சியை சகமாணவர்கள் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இதையடுத்து பள்ளி நிர்வாகம் சம்பவம் குறித்து விசாரணை நடத்தியது. தொடர்ந்து அந்த மாவட்ட கல்வித்துறை சார்பில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அந்த 4 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.