Categories
இந்திய சினிமா சினிமா

“ஆஸ்கர் விருது தேர்வு பட்டியலில்”…. இடம்பிடித்த 4 இந்தியப் படைப்புகள்…. வெளியான தகவல்….!!!!

ஆஸ்கர் விருதுக்குரிய தேர்வு பட்டியலில் “செல்லோ ஷோ”, ஆர்ஆர்ஆர் படத்தின் “நாட்டு நாட்டு” பாடல் உள்ளிட்ட 4 இந்தியப் படைப்புகள் இடம்பெற்றுள்ளது. தமிழில் உருவாகிய “தி எலிபன்ட் விஸ்பரர்ஸ்” என்ற ஆவண குறும்படமும் தேர்வுப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது. சிறந்த ஆவணத் திரைப்படத்துக்கான பட்டியலில் “ஆல் தட் பிரீத்ஸ்”, சிறந்த ஆவண குறும்படத்துக்கான பட்டியலில் “தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்” போன்றவையும் இடம்பெற்றுள்ளது. ஆஸ்கர் விருதின் 4 தேர்வு பட்டியல்களில் இந்திய படைப்புகள் இடம் பெறுவது இதுவே முதல்முறை என கூறப்படுகிறது.

இந்திய படைப்புகள் ஆஸ்கர் தேர்வுப் பட்டியலில் இடம்பெற்று உள்ளதற்கு அதன் படைப்பாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். இதில் ஆர்ஆர்ஆர் படக்குழு டுவிட்டர் வாயிலாக மகிழ்ச்சியை பகிர்ந்து உள்ளது. ஆவண திரைப்படங்களின் இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர். தங்களது படைப்புகளுக்கு விருது கிடைக்கும் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.  95வது ஆஸ்கர் விழா 2023ம் வருடம் மார்ச் 12ம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நடைபெற இருக்கிறது..

Categories

Tech |