உங்களுக்கு ஆஸ்துமா மூச்சுத்திணறல் பிரச்சனை இருக்கிறதா இதோ அற்புதமான எளிய தீர்வு பற்றி பார்ப்போம்.
கொரோனா வைரஸ் சுவாசம் சம்பந்தப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் ஏற்கனவே ஆஸ்துமா, மூச்சுத் திணறல் போன்ற சுவாசப் பிரச்சனை உள்ளவர்கள் இந்த நேரத்தில் பிரத்தியேகமாக எடுத்துக்கொள்ள வேண்டிய தற்காப்பு நடவடிக்கைகள் என்ன என்பது பற்றி இங்கே பார்ப்போம்.
கோவிட்-19 தும்மல், இருமல், மற்றும் தொடுதல் மூலமாகவும் பரவும் என்பதால் சுவாச பிரச்சனை உள்ளவர்கள் முடிந்தவரை மற்றவர்களிடம் இருந்து 10 அடிகளாவது விலகி இருக்க வேண்டியது அவசியம். கொரோனா பரவிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் இவர்கள் வெளியில் செல்வதை அறவே தவிர்க்க வேண்டும். வெளியில் சென்று வந்த உடன் கைகள் மற்றும் முகத்தை நன்றாக கழுவவேண்டும்.
அசுத்தமான தூய்மையற்ற பொருட்களைத் தொடவே கூடாது. சுவாசப் பிரச்சினை உள்ளவர்கள் மருத்துவர்கள் பரிந்துரைத்திருக்கும் தடுப்பூசிகளை தவறாமல் இந்நேரத்தில் போட்டுக் கொள்ளவேண்டும். ஆஸ்துமா போன்ற நாள்பட்ட சுவாச பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு ஓரளவு கொரோனா பாதிப்பு ஏற்படும் பொழுது அது நுரையீரல் அடிப்பாகம் மாறி மரணங்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்பதால் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும்.
ஒரு வேளை இவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படும் நிலையில் ஏற்கனவே சுவாச பிரச்சனைக்கு எடுத்துக்கொள்ளும் மருந்துகளுடன் கொரோனாவிற்கு தரப்படும் மருந்துகளையும் சேர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும். இவர்கள் ஆறிய, குளிர்ந்த உணவுகளை தவிர்த்து, சூடான உணவுகளை எடுத்துக்கொள்வது சாலச் சிறந்தது. அலர்ஜி ஏற்படுத்தும் உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
காய்ச்சி வடிகட்டிய நீரையே பருக வேண்டும். சுவாசப் பிரச்சனை உள்ளவர்கள் கொரோனாக்கு பாதிப்புக்குள்ளாகும் பொழுது மருத்துவரின் பரிந்துரையின் பெயரில் அண்டிபயாடிக், ஆண்டி வைரஸ் மற்றும் தைராய்டு மருந்துகளை எடுத்துக்கொள்ளலாம். மூச்சுத்திணறல் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி மருத்துவ உபகரணங்களை பயன்படுத்தி ஆக்சிஜன் முறை வெளியே செயற்கையாக ஆக்சிஜனை உட்செலுத்தி கொள்ளலாம்.