Categories
கிரிக்கெட் விளையாட்டு

“ஆட்டநாயகன் விருது” அதன்பின் விளையாடாத வீரர்கள்…. பட்டியல் இதோ…!!

ஆட்டநாயகன் விருது பெற்ற பின்னர் இந்திய அணியில் விளையாடாமல் சென்ற வீரர்களை பற்றிய தகவல்களை காண்போம்.

இந்திய அணியில் சில வீரர்கள் தங்களிடம் திறமை இருந்த போதிலும் இறுதிவரை களத்தில் ஆடாமல் இருந்திருக்கின்றனர். மேலும் சிலர் ஆட்டநாயகன் விருதை பெற்ற பின்னர் இந்திய அணியில் ஆட இயலாமல் இருந்திருக்கின்றனர். அத்தகைய வீரர்கள் யாரென அறிந்துகொள்வோம் .

  • தமிழக வீரர் பத்ரிநாத் என்பவர் 2007 ஆம் ஆண்டில் இந்திய அணியில் அறிமுகமாகினார். இவருக்கு மொத்தமாக 3 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே வாய்ப்பளித்திருந்தனர். பின்னர் 2011 ஆம் ஆண்டில் இந்திய அணிக்காக டி20 போட்டியில் ஆடி 37 பந்துகளில் 41 ரன்களை எடுத்தால் ஆட்ட நாயகன் என்ற விருதை பெற்றார். அப்போட்டியே அவருக்கு கடைசி போட்டியாகும். அதற்குப் பின்னர் அவர் இந்திய அணியில் இடம் பெறவில்லை.
  • இடதுகை வேகப்பந்து வீச்சாளர் இர்பான் பதான் மூன்று மாதங்களுக்கு முன் நடந்த சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வினை பெற்றுள்ளார். அவருக்கு தற்போது 35 வயதாகிறது. இறுதியாக 2012ஆம் ஆண்டில் இந்திய அணிக்காக விளையாடிய போது இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்டுகளும் 29 ரன்களும் எடுத்துள்ளார். அப்போட்டியின் மூலமாக ஆட்டநாயகன் என்ற விருதை பெற்ற இவர் அதற்குப் பின்னர் ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணிக்காக அவர் ஆடவில்லை.
  • இந்திய அணியினுடைய சுழல்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா 2008 ஆம் ஆண்டில் அறிமுகமாகினார். பின்னர் 2016-ஆம் ஆண்டில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 18 ரன்களை எடுத்து 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். அதனைத்தொடர்ந்து ஆட்டநாயகன் விருதை பெற்ற பின்னர் அணியில் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
  • இடதுகை சுழல் பந்து வீச்சாளர் ஓஜா 2008 ஆம் ஆண்டில் இந்திய அணியில் அறிமுகமாகிய 2013 ஆம் ஆண்டில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடந்த டெஸ்ட் தொடரில் விளையாடினார். போட்டியில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய அவருக்கு ஆட்ட நாயகன் விருது கொடுக்கப்பட்டது. அதற்குப் பின் அணியில் விளையாடு வதற்கான வாய்ப்பு இவருக்கு கொடுக்கவில்லை.

Categories

Tech |