Categories
உலக செய்திகள்

உக்ரேனில் ஆட்சி கவிழ்ப்பா…? குற்றச்சாட்டை முன்வைத்த அதிபர்…. திட்டவட்டமாக மறுத்த ரஷ்யா….!!

உக்ரைனில் டிசம்பர் 1-ஆம் தேதி ஆட்சி கவிழ்ப்பு நடத்துவதற்கு அந்நாட்டு அரசின் எதிர்ப்பாளரான தொழிலதிபரும் ரஷ்யாவும் சேர்ந்து திட்டமிட்டுள்ளதாக உக்ரைனின் பிரதமர் குற்றம்சாட்டியுள்ளார்.

உக்ரேன் நாட்டிற்கும், ரஷ்யாவிற்குமிடையே பல காலங்களாக மிகவும் கடுமையான மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் உக்ரேனில் டிசம்பர் 1 ஆம் தேதி ஆட்சி கவிழ்ப்பை நடத்துவதற்கு அந்நாட்டு அரசின் எதிர்ப்பாளரான ரினாட் அக்மெடோவ் என்ற தொழிலதிபரும், ரஷ்யர்களும் சேர்ந்து திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டின் அதிபர் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் இதுதொடர்பான உரையாடல் ஆடியோவாகவும் தன்னிடமுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து உக்ரைன் நாட்டின் அதிபர் வைத்த பரபரப்பு குற்றச்சாட்டை அந்நாட்டின் அரசு எதிர்ப்பாளரான தொழிலதிபர் ரினாட் திட்டவட்டமாக மறுத்துள்ளார். அதோடு மட்டுமின்றி ரஷ்யாவும் உக்ரைன் நாட்டின் அதிபர் தெரிவித்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ளது.

Categories

Tech |