நடிகர் சூரி ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் பொங்கல் விழா கொண்டாடியுள்ளார் .
தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி கதாநாயகனாக வலம் வருபவர் சூரி . தற்போது கதாநாயகனாகவும் அவதாரம் எடுத்துள்ளார். பிரபல இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிகர் சூரி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் சூரி மதுரை கடச்சனேந்தல் பகுதியில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் பொங்கல் விழா கொண்டாடியுள்ளார்.
அங்குள்ள நூற்றுக்கும் மேற்பட்ட ஆதரவற்ற குழந்தைகளுடன் சூரி நடனமாடி அவர்களை மகிழ்வித்து உள்ளார். மேலும் குழந்தைகளுக்கு தேவைப்படும் ஸ்கூல் பேக், நோட்டு, உண்டியல் உள்ளிட்ட பொருட்களை வழங்கியுள்ளார். பின்னர் அந்த குழந்தைகளிடம் நன்றாக படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளார் . தற்போது நடிகர் சூரி அந்தக் குழந்தைகளுடன் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது . மேலும் நடிகர் சூரியின் இந்த மனித நேயமிக்க செயலுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது .