தைவானுக்கு அதிபர் ஜோ பைடன் ஆதரவு அளிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சீனாவில் கடந்த 1943 ஆம் ஆண்டு உள்நாட்டுப் போர் நடந்தது. அதன் பிறகு தான் தைவான் தனி நாடாக உருவாகியது. இருப்பினும் தைவான் நாடானது தங்களின் ஒருங்கிணைந்த பகுதி என்று அதிபர் ஜின்பிங் ஆட்சியில் உள்ள நிர்வாகம் கூறியுள்ளது. இது மட்டுமின்றி அவசியமெனில் அதனை கைப்பற்றுவதற்காக படை பலத்தை உபயோகப்படுத்த தயாராக இருக்கிறோம் என்று சீனா அரசு எச்சரித்துள்ளது. இதனால் அவர்கள் எந்த நேரத்திலும் தங்கள் மீது படையெடுத்து வருவார்கள் என்று தைவான் அச்சத்தில் உள்ளது.
இதற்கிடையில் சீனாவினால் தைவானுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் நாங்கள் நிச்சயமாக பாதுகாப்பு அளிப்போம் என்று அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார். இந்த கருத்திற்கு சீனா பதிலடி கொடுத்துள்ளது. இது தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளரான வாங் வென்பின் நேற்று பத்திரிக்கையாளர்களிடம் கூறியதில் “நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு மற்றும் பிற நலன்கள் தொடர்பாக பிரச்சினை எழும்போது சமரசம் செய்யவோ அல்லது விட்டுக்கொடுப்பதற்கோ சீனா தயாராக இல்லை.
மேலும் நாட்டின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு போன்றவற்றை பாதுகாப்பதில் சீனா மக்களின் உறுதியான விருப்பம், நிலைத்தன்மை, வலிமையான திறன் போன்றவற்றை குறைத்து எண்ண வேண்டாம். அதிலும் சீனாவின் உள்ளார்ந்த பகுதி தைவான். இது எங்கள் உள்நாட்டு விவகாரம். இதில் எந்த அயல்நாடுகளும் தலையிட அவசியமில்லை” என்று தெரிவித்துள்ளார்.