கெலவரப்பள்ளி அணையில் இருந்து தண்ணீர் அதிகளவில் வெளியேற்றப்படுவதால் ஆற்றங்கரையோரம் மக்களுக்கு வருவாய் துறையினர் தண்டோரா மூலமாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த கெலவரப்பள்ளி நீர் தேக்கு அணைக்கு நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,040 கன அடி நீர் முழுமையாக தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்படுகிறது.
இதனால் ஆற்றங்கரை ஓரமாக கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ள வருவாய் துறையினர், கெலவரப்பள்ளி அணையில் சுற்றி உள்ள கிராம மக்கள் ஆயுத பூஜையை முன்னிட்டு வாகனங்களை கழுவ, குளிக்கவும் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளனர்.