Categories
தற்கொலை புதுச்சேரி மாநில செய்திகள்

குடும்பத்துல சண்டையா வருது…! எதிர்க்கட்சி தலைவர் மனைவி விபரீத முடிவு….!!

காரைக்காலில் முன்னாள் எதிர்க்கட்சி தலைவரின் மனைவி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காரைக்காலை  அடுத்த திருப்பட்டினம் பகுதியை சேர்ந்த தம்பதியினர்  வி.எம்.சி.வி கணபதி-அருமை கண்ணு. வி.எம்.சி.வி கணபதி  புதுச்சேரி மாநிலத்தில் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். இவர்களது மகன் மற்றும் மகள் இருவரும் திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர். சமீபகாலமாக தம்பதியினருக்கு இடையே அடிக்கடி தகராறு  ஏற்பட்டு வந்துள்ளது. அப்போது அருமை கண்ணு தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறியுள்ளார். இந்நிலையில் நேற்று  முன்தினம் திடீரென்று அருமை கண்ணு மாயமானார்.

அவரை காணாமல் அதிர்ச்சி அடைந்த கணபதி பல இடங்களில் அருமைக்கண்ணுவை  தேடி பார்த்துள்ளார் . ஆனால் அவரால்  கண்டுபிடிக்க முடியவில்லை. இதனையடுத்து காவல்துறையினரிடம் கணபதி  புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அருமை கண்ணுவை தேடி வந்தனர். இதையொட்டி அங்கிருந்த ஆற்றங்கரையோரத்தில் அருமை கண்ணுவின்  செருப்புகள் கிடப்பதைப் பார்த்து தீயணைப்பு நிலைய வீரர்கள் நேற்று முழுவதும் ஆற்றில் அவரை தேடினர். இரவு நீண்ட நேரம் ஆகிவிட்டதாலும் தண்ணீரின் ஓட்டம் அதிகமாக இருந்ததாலும் தேடும் பணியை நிறுத்தி விட்டு நேற்று காலை மறுபடியும் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது ஆற்றின் கரையோரம் இருந்த முட்புதரில் அருமை கண்ணுவின் உடல் சிக்கி கரை ஒதுங்கியிருந்தது தெரியவந்தது. மீனவர்களின் உதவியுடன் அவரது உடல்  மீட்கப்பட்டு  காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் அவர் தற்கொலை செய்து கொண்டதற்கு காரணம்  குடும்ப தகறாரா  அல்லது வேறு ஏதும் காரணம் உள்ளதா என காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |