பெரம்பலூரில் ஆற்றில் மூழ்கி உயிருக்கு போராடியவர்களை தன்னுயிர் மறந்து காப்பாற்றிய பெண்களுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிகின்றன.
கொட்டரை மிருதி ஆற்றில் குளிக்க சென்ற திருவச்சியூர் கிராமத்தை சேர்ந்த 10 இளைஞர்களில் இருவர் ஆழம் அதிகமான பகுதியில் சிக்கிக்கொண்டு உயிருக்கு போராடினர். அவர்களை காப்பாற்ற ஆற்றியில் இறங்கிய மேலும் 2 பேரும் நீரில் சிக்கிக்கொண்டனர். அப்போது துணி துவைத்து கொண்டிருந்த, ஆதனுர் கிராமத்தைச் சேர்ந்த செந்தமிழ் செல்வி, முத்தம்மாள், ஆனந்த வள்ளி ஆகிய மூன்று தாய்மார்கள் தங்கள் உயிரை பொருட்படுத்தாத, ஆற்றில் இறங்கி போர்த்தி இருந்த புடவையை தூக்கி வீசி இளைஞர்களைக் காப்பாற்ற போராடினர்.
அங்கு நடந்த வாழ்வா சாவா போராட்டத்தின் இறுதில் நான்கு பேரியில், இரண்டு இளைஞர்களை உயிருடன் மீட்டனர். பவித்தரன் மற்றும் ரஞ்ஜித் ஆகிய இரண்டு இளைஞர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். தன் உயிரையும், மானத்தையும் பொருட்படுத்தாமல் இரண்டு உயிர்களை காப்பாற்றிய வீர மங்கைகளை பலரும் பாராட்டி வருகின்றனர்.