ஆடிப்பெருக்கை முன்னிட்டு நாக நதியில் பொதுமக்கள் தீபம் ஏற்றி வழிபாடு செய்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள காட்டுக்காநல்லூர் வழியாக நாக நதி செல்கிறது.
இதில் தண்ணீர் தேவை பூர்த்தி செய்யும் ஆற்றுக்கு நன்றி தெரிவிக்கும் வண்ணம் ஆடிப்பெருக்கு நாள் அன்று அவர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகாமையில் இருக்கும் நதிகரைக்குச் சென்று அந்த நதியை வணங்கி காலத்திற்கும் வற்றாத ஜீவநதியாக பிற்கால சந்ததிகளுக்கும் பயனளிக்க வேண்டும் என ஒவ்வொரு வருடமும் தீபம் ஏற்றி வழிபடுவது வழக்கமாக இருந்து வருகிறது.
மேலும் விவசாயம் செழிக்கவும் சந்ததிகள் நலன் வேண்டியும் கண்ணமங்கலம் மற்றும் காட்டுக்காநல்லூர் பகுதியில் வசிக்கும் ஏராளமான பொதுமக்கள் நாக நதியில் தீபம் ஏற்றி வணங்கி அதை தண்ணீரில் விட்டுள்ளனர்.