Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணியின் போது…. வசமாக சிக்கிய நபர்…. கைது செய்த போலீஸ்….!!

தாமிரபரணி ஆற்று மணல் திருடியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தாமிரபரணி ஆற்றுப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். இதனைப் பார்த்த காவல்துறையினர் அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் கீழக்கொட்டை பகுதியில் வசிக்கும் அம்மாமுத்து என்பதும் அவர் சட்டவிரோதமாக மணல் திருட்டில் ஈடுபட்டு வந்ததும் காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது.

மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அம்மாமுத்துவை கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் ஒரு கொலை மிரட்டல் வழக்கும், குரும்பூர் காவல்நிலையத்தில் ஒரு வழக்கும், நெல்லை மாவட்டம் ஆழ்வார்குறிச்சி காவல்நிலையத்தில் ஒரு கொலை வழக்கும், பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் ஒரு கொள்ளை வழக்கு உள்பட மொத்தம் 4 வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |