சட்ட விரோதமாக ஏரி மண்ணை கடத்தி வந்த 3 லாரிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சேந்தமங்கலம் பகுதிகளில் இருக்கும் ஏரியில் இருந்து மண் கடத்தி செல்வதாக காவல்துறை சூப்பிரண்டுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அப்பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது அவ்வழியாக வந்த மூன்று லாரிகளை மடக்கிப் பிடித்து விசாரணை செய்ததில் கடற்படை தளத்திற்கு மண் கடத்தி மாவட்ட கனிமவளத் துறையில் அனுமதி பெற்று வெளிச்சந்தையில் விற்பனை செய்து வருவது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து மூன்று லாரிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.