சூடான சாதத்தில் ஊற்றி சாப்பிட்டால் அப்படி ஒரு ருசியாக இருக்கும். அப்படி ருசிகூடிய மட்டன் குடல் குழம்பு எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
ஆட்டு குடல் – 1
மஞ்சள் தூள் – ஒரு டீஸ்பூன்
பட்டை – 5
கிராம்பு – 5
ஏலக்காய் – 5
இஞ்சி – 25 கிராம்
தேங்காய் துருவல் – 1 கப்
வெள்ளை பூண்டு – 10 பல்
சின்ன வெங்காயம் – (நறுக்கியது) ஒரு கப்
பெரிய வெங்காயம் – 3
தக்காளி – 3
கறிவேப்பிலை – சிறிதளவு
எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்
மிளகாய்த் தூள் – 4 டீஸ்பூன்
மல்லித்தழை – சிறிதளவு
சோம்பு – 2 ஸ்பூன்
சீரகம் – ஒரு ஸ்பூன்
மிளகு – ஒரு ஸ்பூன்
மல்லி தூள் – 5 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் மட்டன் குடலை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவேண்டும். சுத்தம் செய்த பின்னர் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். அதன் பிறகு தக்காளி, கொத்தமல்லி, வெங்காயத்தையும் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் சீரகம், சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், மிளகு, தேங்காய் துருவல், பூண்டு, இஞ்சி, ஒரு கப் பெரிய வெங்காயம் ( பொடியாக நறுக்கியது) அதோடு மஞ்சள்தூள் சேர்த்து இவை அனைத்தையும் மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் நல்லஎண்ணெய் ஊற்றி சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். பின்னர் நறுக்கிய வெங்காயத்தையும் சேர்த்து வதக்கவேண்டும். வெங்காயம் நன்கு வதங்கி வரும் பொழுது பொடியாக நறுக்கிய தக்காளியும் சேர்த்து நன்றாக பேஸ்ட்போல் வதக்க வேண்டும். பிறகு நாம் சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைத்திருக்கும் குடலை எடுத்து இதோடு கொட்டி கிளறி 10 நிமிடம் அதை அப்படியே மூடி வைக்கவேண்டும்.
குடல் நன்றாக வெந்ததும், அதில் மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும் அரைத்து வைத்துள்ள மசாலா கலவை ஆகியவற்றை சேர்த்து கிளறி விட வேண்டும். பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி கலந்து 20 நிமிடம் மூடி வைத்து வேக விடவேண்டும். குடல் குழம்பு நன்றாக கொதித்து வந்த பிறகு கொத்தமல்லி தழை தூவி ஒரு பத்து நிமிடம் மிதமான சூட்டில் கொதிக்க விட்டு இறக்கி விடுங்கள். இப்பொழுது அருமையான மட்டன் குடல் குழம்பு ரெடி..!