Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இப்படியும் இருக்குமா….? வித்தியாசமாக பிறந்த ஆட்டு குட்டி…. ஆச்சரியத்துடன் பார்க்கும் பொதுமக்கள்…!!

ஒற்றை கண்ணுடன் பிறந்த ஆட்டுக்குட்டியை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள தென்கச்சி பெருமாள் நத்தம் கிராமத்தில் சிவகுருநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடு, மாடுகளை வளர்த்து வருகின்றார். இந்நிலையில் இவருக்கு சொந்தமான ஆடு 2 குட்டிகளை ஈன்றுள்ளது. அதில் ஒரு ஆட்டுக்குட்டி வித்தியாசமாக நெற்றியில் ஒற்றை கண்ணுடன் பிறந்துள்ளது.

இதுகுறித்து அறிந்ததும் அந்த கிராமத்தில் வசிக்கும் ஏராளமான பொதுமக்கள் அங்கு சென்று ஒற்றை கண்ணுடன் பிறந்த ஆட்டுக்குட்டியை ஆச்சரியத்துடன் பார்த்துள்ளனர். இது குறித்து கால்நடை மருத்துவரான இளையராஜா என்பவர் கூறும்போது, 10,000 ஆடுகளில் 1 ஆடு இவ்வாறு குறையுடன் பிறக்கும் எனவும், இதற்கு அனாப்தால்மியா என்ற பெயர் உண்டு எனவும் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து கரு உருவாகும் போது முதலில் மூளை உருவாகிவிடும். அதன்பிறகு மூளையானது இடது, வலது என இரண்டாக பிரியும் போது மட்டுமே இரண்டு கண்கள் உருவாகும். ஆனால் இந்த ஆட்டுக்குட்டிக்கு மூளை இரண்டாக பிரியாமல் இருப்பதால் ஒற்றைக்கண் மட்டுமே உருவாகியுள்ளது. மேலும் ஒற்றை கண்ணுடன் பிறந்த இந்த ஆட்டுக்குட்டியின் வாழ்நாள் மிகவும் குறைவாக இருக்கும் என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |