ஆவின் நிறுவனத்தில் முறைகேடு நடந்திருப்பதனால் 5 அலுவலர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் உள்ள ஆவின் நிறுவனத்தில் நெய், பால் உற்பத்திப் பிரிவில் கடந்த ஆண்டு போலி கணக்குகள் தயார் செய்து மோசடி நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வந்துள்ளது. இந்த விசாரணையில் நெய் பிரிவில் மட்டும் ரூபாய் 5 கோடியே 60 லட்சம் மோசடி செய்தது தெரியவந்துள்ளது.
மேலும் அனைத்து பிரிவுகளிலும் மொத்தம் ரூபாய் 13 கோடியே 71 லட்சம் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து உதவிப் பொது மேலாளர் கிருஷ்ணன், சேகர், மேலாளர் மணிகண்டன், துணை மேலாளர் வினிதா, விரிவாக்க அலுவலர் மாயக்கண்ணன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.