ஆப்கானிஸ்தான் நாட்டில் இனி எவராவது ஆயுதங்களை ஏந்தினால் அவர்கள் நாட்டிற்கும், மக்களுக்கும் எதிரானவர்களாக கருதப்படுவார்கள் என்று தலிபான்களின் செய்தித்தொடர்பாளர் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியின் மூலம் தெரியவந்துள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூலை தலிபான்கள் கைப்பற்றி அங்கு ஆட்சி அமைப்பதற்கு குழு ஒன்றையும் உருவாக்கியுள்ளார்கள். மேலும் தலிபான்களால் ஆப்கானிஸ்தான் நாட்டில் அமையவிருக்கும் புதிய அரசாங்கத்திற்கு விசுவாசத்தின் தளபதி முல்லா ஹபத்துல்லா இருப்பார் என்று ஆப்கனை கைப்பற்றிய தலிபான் பயங்கரவாதிகளின் கலாச்சார ஆணையத்தின் உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து ஆப்கானிஸ்தான் நாட்டில் அமையவிருக்கும் தலிபான்களின் தலைமையிலான புதிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பான நடவடிக்கைகள் இறுதி கட்டத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. இதனைத் தொடர்ந்து தலிபான்கள் உருவாகவிருக்கும் புதிய அரசாங்கத்தின் பதவி ஏற்பு விழாவிற்கு சீனா உள்ளிட்ட பல முக்கிய நாடுகளுக்கு தலிபான் பயங்கரவாதிகள் தங்களது அழைப்பையும் விடுத்துள்ளார்கள்.
இந்நிலையில் தலிபான்களின் செய்தித்தொடர்பாளர் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியின் மூலம் முக்கிய தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. அதாவது ஆப்கானிஸ்தான் நாட்டில் இனி எவராவது தலிபான்களுக்கு எதிராக செயல்பட்டு ஏதேனும் ஆயுதங்களை ஏந்தினால் அவர்கள் அரசாங்கத்திற்கும், மக்களுக்கும் எதிரானவர்களாக கருதப்படுவார்கள் என்பதாகும்.