அமெரிக்காவிலுள்ள சுமார் 20 மாவட்டங்களை கொரோனா தொடர்பாக ஆய்வு செய்த சில முக்கிய தகவலை ஹார்வர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் ஒருவர் வெளியிட்டுள்ளார்.
சீனாவிலிருந்து பரவிய கொரோனா அனைத்து நாடுகளிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தியதில் அமெரிக்கா மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தொடர்பாக ஹார்வர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் ஆய்வின் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதாவது அமெரிக்காவிலுள்ள மருத்துவமனைகளில் வைத்து கொரோனாவிற்காக சிகிச்சை பெற்று பலனின்றி உயிரிழந்துள்ள சுமார் 6,000 நபர்களின் இறப்பு தற்போது வரை பதிவு செய்யப்படவில்லை என்பதாகும்.
இந்த ஆய்விற்காக அமெரிக்காவிலுள்ள சுமார் 20 மாவட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஆய்விற்காக எடுக்கப்பட்ட இந்த 20 மாவட்டங்களிலும் சுமார் 44 சதவீதம் பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிப்படைந்துள்ளதும் தெரியவந்துள்ளது.