Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கைவிட்ட பிள்ளைகள் ….. இறப்பதற்குள் பார்க்க வேண்டும் ….. 7 ஆண்டாகதேடி அலையும் தம்பதி …!!

இறப்பதற்குள் ஒரு முறையாவது பெற்ற பிள்ளைகளை பார்க்க வேண்டும் என பிள்ளைகளால் கைவிடப்பட்ட தம்பதி, ஊர் ஊராக தங்களது மகளையும் மகனையும் தேடிவருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் கோட்டாறு பகுதியில் புறம்போக்கு குடிசையமைத்து வாழ்ந்துவந்தவர் கணேசன்(70). இவரின் சிறுவயதில் ரயில் தண்டவாளங்கள் போடுவதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டதால் வீட்டை இழந்தார்.பின்னர் ஊர் ஊராகச் சென்று சாலையோரங்களில் தங்கி குடை தைக்கும் தொழில்செய்து குடும்பத்தைக் காப்பாற்றிவந்தார். இவருக்கு சரசு என்ற மனைவியும் லஷ்மி என்ற மகளும் சத்தியராஜ் என்ற மகனும் உள்ளனர்.

ஏழு ஆண்டுகளுக்கு முன்பு இவரது மகளும், மகனும் காதல் திருமணம் செய்துகொண்டு பெற்றோரை தனியாக தவிக்கவிட்டு சென்றுவிட்டனர். சிறிது நாட்கள் கழித்து பிள்ளைகளும் எங்கு இருக்கிறார்கள் என்ற தகவல் கூட கிடைக்காமல்போனது. பின்னர், இருவரும் வீடு வீடாக குடை, செருப்பு ஆகியவை தைப்பது, ஈயம் பூசுவது போன்ற பணிகளை செய்து பிழைப்பு நடத்திவந்தனர். இதற்கிடையே பிள்ளைகள் எங்கு இருக்கிறார்கள் எனவும் அவர்கள் ஊர் ஊராகத் தேடிவருகின்றனர்.

ஆதரவின்றி ஊர் ஊராகச் சென்று நாடோடி வாழக்கை நடத்திவரும் இந்த தம்பதிக்கு, இறப்பதற்கு முன்பு ஒரு முறையாவது தங்களது மகனையும் மகளையும் பார்த்துவிட வேண்டுமென்ற ஆசையோடு தமிழ்நாடு, கேரளா உட்பட பல இடங்களில் பல வருடங்கள் கடந்து தேடிவருகின்றனர்.இதுவரை, அவர்களைக் கண்டுபிடிக்க முடியாத நிலையில் தற்போது தம்பதி இருவரும் கன்னியாகுமரியில் உள்ள மார்த்தாண்டம் மேம்பாலத்தின் அடியில் இரவிலும் பகலிலும் எந்தவித பாதுகாப்புமின்றி தங்கியுள்ளனர். வயது முதிர்ந்த காரணமாக வேலைக்கும் செல்ல முடியாமல், உணவுக்கு வழியுமின்றி பிறர் தரும் உணவை வாங்கி உண்ணும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

Categories

Tech |