Categories
உலக செய்திகள்

ஆபத்தில் உள்ள நகரங்கள் …. நீருக்குள் மூழ்கும் அபாயம் …. எச்சரிக்கை விடுத்த நாசா …!!!

இந்தியாவில் உள்ள  12 கடலோர நகரங்கள் 2100 -ம் ஆண்டிற்குள் நீருக்குள் மூழ்கும் அபாயம் இருப்பதாக  நாசா எச்சரித்துள்ளது .

காலநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமயமாதல் காரணமாக கடல் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது .இதனால் பல சர்வதேச சுற்றுச்சூழல் அமைப்புகளும்  எச்சரிக்கை விடுத்து வருகின்றன. அத்துடன் ஆண்டுக்கு சராசரியாக கடல்மட்டம் சுமார் 3.6 மில்லிமீட்டர் விகிதத்தில் உயர்ந்து வருகின்றது.இந்தியாவில் இமயமலை உட்பட பனி மலைகளிலும் பனிப்பாறைகள் உருகும் விகிதமும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் காலநிலை மாற்றம் குறித்த  IPCC  வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில் கடல் நீர்மட்டம் உயர்ந்து வருவது குறித்த தகவல்களை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் நாசா வெளியிட்டுள்ளது.அந்த அறிக்கையின்படி வருகின்ற 2100 -ம் ஆண்டிற்குள் இந்தியாவில் உள்ள 12 கடலோர நகரங்கள் சராசரியாக 3 மீட்டர் அளவுக்கு நீரில் மூழ்கும் அபாயம் இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக மனித நடவடிக்கைகளால் ஏற்பட்ட மோசமான சுற்றுச்சூழல் பாதிப்பே இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  நாசா வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் நீரில் மூழ்கும் அபாயத்தில் இருக்கும் 12 கடலோர நகரங்கள் குஜராத் கண்ட்லா(1.87 அடி) ,ஒக்ஹா(1.96 அடி), பவுநகர்(2.70 அடி), மும்பை மகாராஷ்டிரா(1.90 அடி) கோவா மோர்முகாவ்( 2.06 அடி), கர்நாடகா மங்களூர்( 1.87 அடி),, கேரளா கொச்சி( 2.32 அடி), ஒடிசா பரதீப் (1.93 அடி), கொல்கத்தா கிதிர்பூர்(0.49 அடி), ஆந்திரா விசாகப்பட்டினம்(1.77 அடி), தமிழ்நாடு சென்னை(1.87 அடி ),தூத்துக்குடி (1.9 அடி) ஆகிய நகரங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது உள்ள காலநிலை அடிப்படையில்இந்த தகவல்கள் வெளியாகி இருப்பதாகவும்,  ஒருவேளை மாறும் பட்சத்தில் கடல் நீரின் மட்டம் உயருமானால் விகிதத்தில் மாற்றம் ஏற்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |