Categories
சென்னை மாவட்ட செய்திகள்

எஸ்.பி.பிக்கு உயிர் காக்கும் கருவிகளுடன் சிகிச்சை – கமல்..!!

மக்கள் நீதி மைய கட்சித் தலைவர் திரு கமல் ஹாசன் திரு எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை குறித்து மருத்துவமனைக்கு சென்று விசாரித்தார்.

பின்னணி பாடகர் திரு  எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாக மருத்துவமனை தெரிவித்த நிலையில் மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் திரு கமல் ஹாசன் மருத்துவமனைக்கு சென்று எஸ்.பி.பி. யின் உடல் நிலை குறித்து விசாரித்தார். மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது எஸ்.பி.பி. நல்ல உடல் நிலையில் இருக்கிறார் என சொல்ல முடியாது என்றும் உயிர் காக்கும் கருவிகளுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

Categories

Tech |