Categories
தேசிய செய்திகள்

அப்பாடா நிம்மதி… புதிய வைரஸ் இதுவரை இந்தியாவில் இல்லையாம்..!!

கொரோனா வைரஸ் தனது மரபு குறியீட்டில் 17 குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டுள்ளது. இப்புதிய வைரஸ் மாறுபாடு 70% வேகமாக பரவக்கூடியது. பிரிட்டன், ஆஸி., டென்மார்க் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் பதிவாகியுள்ளது. இந்தியாவில் இதுவரை கண்டறியப்படவில்லை என மத்திய அரசு கூறியுள்ளது.

மாறுபாடு அடைந்துள்ள கொரோனா வைரஸ் வீரியமிக்கதாக உள்ளது. கொரோனா வைரஸையே முழுமையாக புரிந்துக்கொள்ள நிலையில், இந்த மாறுபாடு ஏற்பட்டுள்ளது. இதை பற்றி உடனே ஒரு முடிவுக்கு வர முடியாது என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க உலக நாடுகளை வலியுறுத்தியுள்ளது.

ஐரோப்பிய யூனியனின் மருந்து ஒழுங்குமுறை அமைப்பின் தலைமை அதிகாரி பைசர் தடுப்பு மருந்தே மாறுபாடு கொரோனா வைரசுக்கும் பொருந்துகிறது என கூறியுள்ளார். இந்த நிலையில் நிதி ஆயோக்கின் சுகாதார உறுப்பினர் டாக்டர் வி.கே.பால், மாறுபாடைந்த புதிய வைரஸ் இந்தியாவில் இதுவரை காணப்படவில்லை, இது நம் நாட்டில் தடுப்பூசிகள் உருவாக்கப்படுவதில் எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றார்.

Categories

Tech |