Categories
கவிதைகள் பல்சுவை

வாழ்க்கையில் வெற்றியை நோக்கி அடியெடுத்து வையுங்கள்- ஏபிஜே அப்துல்கலாம்

என்றும் மனதில் அழியா உருவமாய் நிலைத்திருக்கும் ஐயா ஏபிஜே அப்துல்கலாம் அவர்களின் பொன்மொழிகள், வாழ்க்கையில் வெற்றியை நோக்கி அடியெடுத்து வையுங்கள்:

1. அழகை பற்றி கனவு காணாதீர்கள், அது உங்கள் கடமையை பாழாக்கிவிடும்…

கடமையை பற்றி கனவு காணுங்கள், அது உங்கள் வாழ்க்கையை அழகாக்கும்..

2.வெற்றி உன்னிடம்.. கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே,

அது உன்னை கொன்றுவிடும்.

கண்ணை திறந்து பார்..அதையும் நீ வென்று விடலாம்.

3. நாம் அனைவருக்கும் ஒரே மாதிரி திறமை இல்லாமல் இருக்கலாம்…

ஆனால் அனைவருக்கும் திறமையை வளர்த்துக் கொள்ள,

ஒரே மாதிரி வாய்ப்புகள் உள்ளன…

 4. நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும்,

எப்போதுமே மண்டியிடுவது இல்லை….

5. நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம்…

ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்..

6. சிந்திக்க தெரிந்தவனுக்கு ஆலோசனை தேவை இல்லை,

துன்பங்களை சந்திக்க தெரிந்தவனுக்கு வாழ்க்கையில் தோல்வியே இல்லை…

7. வாய்ப்புக்காக காத்திருக்காதே,

உனக்கான வாய்ப்பை நீயே ஏற்படுத்திக் கொள்..

8. நீங்கள் சூரியனைப் போலப் பிரகாசிக்க வேண்டுமானால்..

முதலில் சூரியனைப் போல எரிய வேண்டும்..

9. ஒருமுறை வந்தால் அது கனவு..

இருமுறை வந்தால் அது ஆசை..

பல முறை வந்தால்  மட்டுமே அது இலட்சியம்..

10. உலகம் உன்னை அறிவதைவிட,

உன்னை உலகிற்கு அறிமுகம் செய்துகொள்..

11. வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பதற்கு ஒரு வழி,

அடுத்தவர்களின் வெற்றியை உங்களுடைய வெற்றியைப் போலக்..

கொண்டாட கற்றுக் கொள்ளுங்கள்…

12. முடியாத விஷயங்கள் குறித்து கனவு காண்பவர்களே..

அவற்றை வெற்றி கொள்ள முடியும்…

Categories

Tech |