Categories
தேசிய செய்திகள்

இளைஞரின் விபரீத செயலால் ஏற்பட்ட வயிற்று வலி…பரிசோதனையில் டாக்டர் கண்ட அதிர்ச்சி!

அசாம் மாநிலத்தை சேர்ந்த 30 வயது இளைஞர் ஒருவர் தனது பாலியல் சுகத்திற்காக அந்த உறுப்பில் கேபிள்கள் மற்றும் பிற பொருட்களை பயன்படுத்துவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்தநிலையில் ஒருநாள் அந்த இளைஞர் மொபைல் போன் சார்ஜர் வயரை உபயோகபடுத்தும் போது அந்த கேபில் அவரது சிறுநீரகப் பையில் சிக்கிவிட்டது.

கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த அந்த இளைஞர் உடனே பதறிப்போய் மருத்துவமனை சென்று, அங்கு உண்மையை மறைத்து எதிர்பாராதவிதமாக தான் தெரியாமல் மொபைல் போனின் சார்ஜர் வயரை விழுங்கி விட்டதாக மருத்துவரிடம் கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து அவருக்கு மருத்துவர்கள் எண்டோஸ்க்கோப் பரிசோதனை செய்து பார்த்தனர்.. ஆனால் எதுவும் அவர்களால் கண்டுபிடிக்கவே முடியவில்லை. மேலும் அவருக்கு அறுவை சிகிச்சை செய்து பார்த்த போது அவரது இறப்பை குழாயிலும் எதுவும் இல்லை.. இதனால் குழம்பிபோன மருத்துவர்கள் அப்போது அவருக்கு எக்ஸ்ரே எடுத்துள்ளனர்.

 

அதில், அந்த நபரின் சிறுநீரகப் பையில் சார்ஜர் ஒயர் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் உடனடியாக அறுவை சிகிச்சை செய்து  2 அடி நீளமுள்ள அந்த  கேபிளை வெற்றிகரமாக வெளியே எடுத்தனர். தற்போது அந்த இளைஞர் குணமடைந்து வருகிறார்.

இந்நிலையில் இது தொடர்பாக அந்த அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவ நிபுணர் wallie islam தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, “25 வருடங்களாக நான் அறுவை சிகிச்சை செய்து வருகின்றேன். ஆனால் இதுபோல ஒரு அறுவை சிகிச்சை நடப்பது இதுவே முதல் முறையாகும். அந்த இளைஞர் செய்தது ஆபத்தான சுய இன்பமாகும்.

அந்த இளைஞர் கேபிள் சொருகிய 5 நாட்களுக்கு பிறகு தான் என்னிடம் வந்தார். அவர் அப்பவே உண்மையை சொல்லியிருந்தால், அந்த கேபிளை சொருகிய அதே வழியில் எடுத்து இருக்கலாம். ஆனால் அவர் பொய் சொன்னதன் காரணமாக அறுவை சிகிச்சை செய்யவேண்டிய  நிலை ஏற்பட்டுள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.

 

Categories

Tech |