சிறுமியை கடத்தி திருமணம் செய்த நபரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கரூர் மாவட்டத்திலுள்ள தோகைமலையை சார்ந்த ஒருவர் தனது 15 வயது மகளை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரன் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன சிறுமியை தீவிரமாக தேடி வந்துள்ளனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கவுண்டம்பட்டியை சேர்ந்த செல்வம் என்பவர் சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்ததாக காவல் துறையினருக்கு தகவல் ஒன்று கிடைத்துள்ளது.
அந்த தகவலின் பேரில் அவர்கள் செல்வத்தை அழைத்து விசாரித்தபோது செல்வம் உண்மையைக் கூறினார். பின்னர் அந்த சிறுமி மீட்கப்பட்டு பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டுள்ளார். செல்வத்தின் மீது தோகைமலை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.