Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பெண் குழந்தை கசக்குதா….? கருவிலேயே கொல்லப்பட்ட சிசு…. 4 பேர் கைது….!!

கருவில் இருக்கும் குழந்தை பெண் குழந்தை என்பதை தெரிந்து கொண்டு கர்ப்பிணி பெண்ணிற்கு கருகலைப்பு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கருவில் இருக்கும் குழந்தை ஆண் குழந்தையா பெண் குழந்தையா என்பதை கண்டு சொல்வது சட்டப்படி குற்றம் ஆகும். பெண் குழந்தை வேண்டாம் என்ற முடிவில் சிலர் கருவிலேயே சிசுவை அழிக்க கூடும் என்ற நிலையில் தான் இத்தகைய சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனாலும் சில இடங்களில் இதுபோன்று கருவில் இருக்கும் குழந்தை என்ன குழந்தை என்பதை தெரிந்து கொண்டு கருக்கலைப்பு செய்யும் பணி நடந்து வருகிறது.

அவ்வகையில் சேலம் மாவட்டத்திலுள்ள ஆத்தூர் பகுதியை சேர்ந்த சரண்யா என்னும் கர்ப்பிணி பெண்ணிற்கு ஸ்கேன் எடுக்கப்பட்டு அவரது வயிற்றில் இருப்பது பெண் குழந்தை என்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அந்தப் பெண்ணின் தாய் மற்றும் உறவினர்கள் சேர்ந்து வீட்டில் வைத்து அவருக்கு கருக்கலைப்பு செய்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் பெண்ணின் கருவை கலைத்த தாய் பூங்கொடி, சிவ பிருந்தா, அலமேலு, சின்ராசு ஆகியோரை கைது செய்து ஸ்கேன் எடுக்க உதவி செய்த புகழ் மற்றும் கருக்கலைப்பு செய்த போலி மருத்துவர் பூமணி ஆகிய இருவரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |