சென்னை விமான நிலையத்திற்கு மற்ற நாடுகளில் இருந்து வரக்கூடிய விமானங்கள் மிகப்பெரிய அளவில் குறைந்து இருக்கிறது.
கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்திலும் உறுதி செய்யப்பட்டத்தை தொடர்ந்து சென்னை பன்னாட்டு விமான நிலையத்துக்கு வரும் சவூதி அரேபியா , குவைத் உள்ளிட்ட அரேபிய நாடுகளில் இருந்து வரக்கூடிய விமானம் வராமல் குறைந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பாக சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் கூட்டம் அதிகமாக இருக்கக்கூடிய நிலையில் தற்போது அது மிகப்பெரிய அளவில் குறைந்திருக்கிறது.சென்னை விமான நிலையத்திற்கு ஒரு நாளைக்கு 59 பன்னாட்டு விமானங்கள் வந்து செல்கிறது.
தற்போது இந்த எண்ணிக்கை 60 சதவீதம் அளவிற்கு குறைந்திருக்கிறது. 10க்கும் மேற்பட்ட விமானங்கள் சேவையை ரத்து செய்திருக்கிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு அச்சுறுத்தல் அதிகமாக இருப்பதால் விமான பயணத்தை மேற்கொள்வதை பொதுமக்கள் தவித்து வருகின்றனர். 2 நாட்களுக்கு முன்பாக சென்னையில் இருந்து சவுதி அரேபியா சென்ற விமானம் திருப்பி அனுப்பப்பட்டது. இதே போன்று பல நாடுகளிலிருந்து சென்னை வரும் விமான சேவையும் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.
சென்னை விமான நிலையத்திற்கு வரக்கூடிய பயணிகளு சுகாதாரத்துறை அதிகாரிகள் , விமானதுறை அதிகாரிகள் காய்ச்சல் , மூச்சுத்திணறல் இருக்கிறதா ? என்று மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்படுத்து கின்றனர். ஏதேனும் அறிகுறிகள் தெரிந்தால் அருகிலேயே இருக்கக்கூடிய 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறார்கள். குறிப்பாக விமான பயணிகளின் விவரங்கள் , அவர் எந்த மாவட்டம் , எந்த நாட்டில் இருந்து வருகின்றார். அவர் குடும்பத்தில் எத்தனை பேர் இருக்கிறார்கள், எந்த நாட்டுக்குச் செல்ல இருக்கின்றார். என்னென்ன பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள் என்பது தொடர்பாக முழு விவரங்களையும் சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் விமானத் துறை அதிகாரிகள் சேகரிக்கின்றனர்.