பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையை அதிமுகவை சேர்ந்த 3 பேரை சிபிஐ கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றது.
2019 ஆம் வருடம் பிப்ரவரி 24ம் தேதியன்று பொள்ளாச்சியில் பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்ததாக பாதிக்கப்பட்ட நிலையில் இளம்பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த செயலை செய்தவர்கள் அதிமுகவை சேர்ந்தவர்கள் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அதிமுகவை சேர்ந்தவர்கள் இல்லை என்று அதிமுக நிராகரித்து வந்தது. இந்நிலையில் இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு கொண்டு செல்லப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான 5 பேர் சேலத்தில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இரண்டு வருடங்களுக்குப் பிறகு திடீர் திருப்பமாக அதிமுக பிரமுகர் உட்பட மூன்று நபர்களை காவல்துறை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது. தற்போது இவர்கள் மூவரும் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து சிபிஐ இவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றது. மேலும் இவர்களை அதிமுக கட்சியில் இருந்து நீக்கவும் உத்தரவிட்டுள்ளது.